கோவை மாநகர காவல் ஆணையராக தீபக் எம். டமோர் பொறுப்பேற்பு : உயரதிகாரிகள் வாழ்த்து!!

17 May 2021, 2:39 pm
Cbe New Commissioner - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக தீபக் . எம். டமோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோவை மாநகர காவல் ஆணையராக சுமித் சரண் பணியாற்றி வந்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி இவர் பணி மாற்றம் செய்யப்பட்டார் .

இவருக்கு பதிலாக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். இவர் தற்போது தமிழ்நாடு காவல் துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.

தொடர்ந்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அமல்ராஜ் கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக தீபக் . எம். டமோர் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.

இவர் இதற்கு முன் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றினார். 2016 – 17 ஆம் ஆண்டு கோவை சரக டிஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் வழ்த்து தெரிவித்தனர்.

Views: - 111

0

0