கோவையில் களைகட்டிய தீபாவளி மதுவிற்பனை: ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா?

Author: Aarthi Sivakumar
5 November 2021, 11:25 am
Tasmac Salary Hike - Updatenews360
Quick Share

கோவை: தீபாவளிக்கு முந்தைய நாளில் கோவை மாவட்டத்தில் 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் வடக்கு டாஸ்மாக் மாவட்டத்தில் 58 மதுக்கடைகள், தெற்கு டாஸ்மாக் மாவட்டத்தில் 135 மதுக்கடைகள் என 293 கடைகள் செயல்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு இவற்றில் விற்பனை செய்வதற்காக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மது பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

தீபாவளிக்கு முதல் நாளான புதன்கிழமை தெற்கு மாவட்டத்தில் 7.51 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. வடக்கு மாவட்டத்தில் 10 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சராசரியாக, கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும். தீபாவளியை முன்னிட்டு விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை குறைவு என்றும், பண்டிகை நாளில் மழை காரணமாக விற்பனை மந்தமாக இருந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Views: - 431

0

0