தமிழகம் முழுவதும் நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் : இந்த ஆண்டு முன்பதிவு இவ்வளவுதான்….

10 November 2020, 11:36 am
Diwali Spl Bus - Updatenews360
Quick Share

தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வரும் 3 நாட்களுக்கு 14 ஆயிரத்து 757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது மட்டுமின்றி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 9 ஆயிரத்து 510 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்தில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

இதனால் இந்த முறை தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 19

0

0