பசும்பொன்னில் களைகட்டும் 114வது தேவர் ஜெயந்தி விழா : நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!!

Author: Babu Lakshmanan
30 October 2021, 10:07 am
CM stalin devar - updatenews360
Quick Share

ராமநாதபுரம் : முத்துராமலிங்க தேவர் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உக்கிரபாண்டியத் தேவர்- இந்துராணி அம்மாளுக்கு 30.10.1908 ஆம் ஆண்டு பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். பின்னர் 30.10.1963 ஆம் ஆண்டு அவரது பிறந்த தினத்திலேயே அவர் இயற்கையும் எய்தினார். இதனால், இந்த நாளை ஜெயந்தி விழாவாகவும், குருபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க ஆலயத்தில், யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இன்று நடக்கும் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினமே மதுரை சென்றடைந்தார்.

இன்று அவர் பசும்போன் நோக்கி சென்ற அவர், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்த மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திலும் அவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.லட்சக்கணக்கானோர் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Views: - 423

0

0