மனைவி சுட்ட தோசை கருகியதால் தகராறு : விரக்தியில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2021, 10:40 am
Dosa Fail Suicide - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் மனைவி சுட்ட தோசை கருகியதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் எஸ் .ஐ .எஸ். எஸ் காலனி நாராயணசாமி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 52) கட்டிட தொழிலாளி. இவருக்கு மாதவி என்ற மனைவியும் ,2 மகன்களும் உள்ளனர் .
இவர் நேற்று வீட்டில் சாப்பிடும்போது மனைவி தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு தோசை கருகிவிட்டது. இதனால் மனைவியுடன் தகராறு செய்தார்.

ஆத்திரத்தில் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் வேட்டியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்கனவே 4 முறை இதேபோல தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது காப்பாற்றப்பட்டு விட்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 202

0

0