சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த 8 பெண்கள்: தடுத்து நிறுத்திய போலீசார்…!!

15 November 2020, 12:53 pm
salem collector office - updatenews360
Quick Share

சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவுடி கோழி பாஸ்கர். இவர் மற்றும் இவரது சகோதரர் ராஜா ஆகியோர்மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த இவர்கள் கடந்த ஓர் ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அதன்படி போலீசார் இவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கோழி பாஸ்கரை சந்திக்க அவரது மனைவி உஷா மற்றும் இரண்டு மகள்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற போலீசார் விடியற்காலை 3 மணியளவில் கோழி பாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் ராஜா ஆகியோரை சேலம் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவரது குடும்பத்தினரை காவல்துறையின துப்பாக்கி காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவுடி கோழி பாஸ்கரின் மனைவி உஷா, இரண்டு மகள்கள், தாய் மகாலட்சுமி, சகோதரி லதா உள்பட 8 பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். கோழி பாஸ்கர் மீது காவல் துறையினர் தொடர்ந்து பொய்வழக்கு போடுவதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Views: - 36

0

0