மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் சோப்பு, சானிடைசரை கொடுங்க : ஸ்டாலின் வலியுறுத்தல்

26 March 2020, 6:55 pm
Stalin 02 updatenews360
Quick Share

சென்னை : தமிழக மக்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கு சோப்பு, முகக்கவசம் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை யும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரையில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 650-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்த அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. மக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக மக்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கு சோப்பு, முகக்கவசம் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக் கவசம், சேனிட்டைசர், சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை திமுக MLAs & MPs செய்ய வேண்டும்.#CoronaVirus தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.