திமுகவில் உதயமானது சுற்றுச்சூழல் அணி : கார்த்திகேய சிவசேனாபதி செயலாளராக நியமனம்..!!

23 November 2020, 1:43 pm
karthikeya sivasenapathi - udhayanidhi stalin - updatenews360
Quick Share

சென்னை : திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அணியின் செயலாளராக கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவில் நிர்வாகிகள் மாற்றும், புதிய நிர்வாகிகள் நியமனம் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுகவில் சுற்றுச்சூழல் அணி என்னும் புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு கார்த்திகேய சிவசேனாபதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழக சட்டதிட்டத்தில்‌ கழகத்‌ துணை அமைப்புகள்‌, சார்பு மன்றங்கள்‌ தலைப்பிலான விதி: 31 – பிரிவு 19ன்படி; “தி.மு.க. சுற்றுச்சூழல்‌ அணி” எனும்‌ புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன்‌ மாநிலச்‌ செயலாளராக திரு. கார்த்திகேய
சேனாபதி அவர்கள்‌ தலைமைக்‌ கழகத்தால்‌ நியமிக்கப்படுகிறார்‌. ஏனைய நிர்வாகிகள்‌ விவரம்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0