திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!!

Author: Udayachandran
11 October 2020, 3:38 pm
Stalin - Updatenews360
Quick Share

திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழுவை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

Durai Murugan breaks down in Assembly - Durai Murugan- DMK |  Thandoratimes.com |

தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. அதில் டிஆர் பாலு, பேராசிரியர் அ.ராமசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டிகேஎஸ் இளங்கோவன் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுகவில் சமீபத்தில் செயற்குழு கூட்டம் கூடி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் திமுகவும் சட்டமன்ற தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறது.

Views: - 47

0

0