கெட்ட வார்த்தையில் சீமானை திட்டிய திமுக நிர்வாகி : இதுதான் உங்க அரசியல் நாகரீகமா..? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!! (வீடியோ)

25 February 2021, 8:10 pm
seeman 2 - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 1ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நடந்த திமுக கூட்டமொன்றில் அக்கட்சியின் பிரமுகர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சரை தகாத வார்த்தைகளில் விமர்சித்தார். இதன் உச்சகட்டமாக, சசிகலாவை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அசிங்கமான வார்த்தையில் பேசி, மேடையில் இருந்தவர்களையே முகம் சுழிக்க வைத்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேடையில் அவர் பேசியதாவது :- திமுக ஊழல் செய்தது, ஆ. ராசா ஊழல் செய்தார் எனக் கூறியவர் சீமான். ஒக்காள ஓலிங்க இன்னைக்கு சசிகலாவா சந்தித்து வந்திருக்கிறார்.
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சுதந்திர போராட்டத்திற்காகவா ஜெயலிக்கு போனாளா அந்தப் பொம்பள..? ஆயிரம் ஆயிரம் கோடியாக சுருட்டிய குற்றத்திற்காக, 10 கோடி அபராதம், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று, அதனை அனுபவித்து வந்துள்ளார். அப்படிபட்டவரை போயி சந்தித்து பேசியிருக்கிறார் சீமான். ஒரு மணி நேரம் என்ன பேசியிருப்பார். எவ்வளோ கோடி இருக்கு.. கூட்டணி போட்டுக்கலாமா..? என்று தான். இவங்கதான் நாட்டை காப்பாற்ற போகிறவர்கள், எனக் கூறினார்.

ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் தமிழன் பிரசன்னா, தற்போது சீமானை பற்றி இழிவாக பேசியது நாம் தமிழர் கட்சித் தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழன் பிரசன்னாவை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 1

0

0