திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி

19 October 2020, 12:15 pm
trb raja - updatenews360
Quick Share

திருவாரூர் : திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களை விட தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களையும் கொரோனா தாக்கி வருகிறது. அப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனா தொற்றிற்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 81

0

0