“நீ பாதி, நான் பாதி“ : பொன்முடியால் திமுகவில் மேலும் ஒரு சலசலப்பு!!

4 September 2020, 6:54 pm
KN Nehru, Ponmudi- Updatenews360
Quick Share

சென்னை : திமுக பொதுக்குழு கூட்டம் கூடும் நிலையில் அடுத்தடுத்து சலசலப்புகளால் திமுகவினர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ஆம் தேதி கூடுகிறது. அதற்குள் திமுகவில் காலியாக இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் , பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதிய பூகம்பம் ஒன்று கட்சிக்குள் நிலவி வருவது உடன்பிறப்புகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. இவர் மாவட்ட பொறுப்பில் இருந்து திமுகவின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த பொறுப்பை ஏற்க பொன்முடி மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. கருணாநிதியின் நம்பிக்கை பாத்திரமாக விளங்கிய கே.என்.நேருவும், பொன்முடியும் ஒரே சமயத்தில் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருவரும் ஒரே சமயத்தில் கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்றவர்கள். இருவரும் இணையாக வளர்ந்து வந்தவர்கள்.

இந்த சூழலில் கட்சி தரும் துணைப் பொதுச்செயாலளர் பதவி தனக்கு வேண்டாம், தனக்கு இணையாக வளர்ந்து வந்த கே.என் நேருவுக்கு மட்டும் கழக முதன்மை செயலாளராக இருக்கிறார். அதனால் அந்த பதவியை இரண்டாக்கி ஒன்றை நேருவுக்கும் மற்றொன்றை தனக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்திருக்கிறாராம்.

பொன்முடியின் கோரிக்கை இத்துடன் முடியவில்லை இன்னொரு கோரிக்கையும் வைத்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து வன்னியர் சமுதயாத்தை சேர்ந்தவருக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் பதவியையும், இன்னொரு பகுதியில் தனது மகன் கௌதம சிகாமணியை மாவட்ட பொறுப்பாளராக ஆக்க வேண்டும் என்பது விருப்பம் என்கிறார்கள் பொன்முடியின் ஆதரவாளர்கள்.

இதற்கு பொன்முடி ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார். தான் மாநில பொறுப்புகளில் சென்றால் தனது மகனை வைத்து மாவட்டத்தை தனது பிடியில் நழுவாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்ற யோசனையில் உள்ளதாகவும், இதற்காக உதயநிதி மூலம் தனது மகன் முயற்சி செய்தி வருவதாகவும் பொன்முடி தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.

ஆக, வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் பல பதவிகள் புதியதாய் உதயமாகலாம், பல வாரிசுகளும் அதில் இடம்பெறலாம் என்ற தகவல்களும் கசிந்துள்ளன. ஆனால் இதற்கெல்லாம் தலைமையில் உள்ள ஸ்டாலின் என்ன முடிவு செய்கிறார் என்பது விரைவில் தெரியும் என்கின்றனர் கழக உடன்பிறப்புகள்.

Views: - 0

0

0