சாலையோரம் பூ விற்பவர்களை மிரட்டி பணம் கேட்கும் திமுக பிரமுகர்.!

15 August 2020, 12:07 pm
Dmk Issue - Updatenews360
Quick Share

திருப்பூர் : பெருமாநல்லூரில் சாலையோரம் பூ விற்பனை செய்பவர்களை திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பணம் கேட்டு மிரட்டும் காட்சி வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற திமுக துணைத் தலைவர் CTC வேலுச்சாமி என்பவர் பெருமாநல்லூர் நால் ரோட்டில் வருவாய் துறைக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் உள்ள பூ கடைக்காரர்களை மிரட்டியுள்ளார்.

முறையான ஏலம் விடுவதாகவும் இல்லை என்றால் தனக்கு இவ்வளவு தொகை வேண்டும் என்று அவர் கேட்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை எதிர்த்து கேள்வி கேட்க சென்றவர்களை தகாத வார்த்தைகளால் காவல் துறை உதவி ஆய்வாளர் முன்னிலையில் தரக்குறைவாக வேலுச்சாமி பேசியுள்ளார். இந்த பூக்கடை ஒட்டிய இடத்தில் தான் எந்த வித ஆவணம் இன்றி திமுக அலுவலகம் செயல்படுவது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமாரின் பரிந்துரைப்படி வட்டாட்சியர் அவர்கள் ஆணைப்படி நில அளவையரை வைத்தும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களை வைத்தும் நில அளவை செய்து பார்த்ததில் பூக்கடை இடமானது வருவாய் துறைக்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த இடமானது ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனவே நத்தம் புறம்போக்கு நிலத்தில் இருக்கும் எந்த பூக்கடைக்கு வருவாய் துறையினரிடம் செலுத்தவேண்டிய பீமா வரியை செலுத்தி கடையை நடத்திக் கொள்ள கடை உரிமையாளர்களுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

Views: - 33

0

0