“நாம சொல்றவன்தா தாசில்தார்“ : ஆட்சிக்கு வரும் முன்னே அதிகாரத்தை கையில் எடுக்கும் திமுக!!

27 November 2020, 2:36 pm
DMK issue - Updatenews360
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு அதிகாரிகளை நாங்கள் தான் நியமிப்போம் என திமுக நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 31 திமுக மூத்த உறுப்பினர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் மூன்று லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன், திமுக ஆட்சிக்கு வந்தால் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை டிஎஸ்பி என அனைவரையும் நாம்தான் நியமிப்போம்.

காவல்துறை தற்போது பயந்து கொண்டிருக்கிறது . திமுக ஆட்சிக்கு வந்தால் அரசை நாம்தான் நடத்துவோம் பல்வேறு நிறுவனங்களில் உள்ள அதிமுகவினரை வெளியேற்றி இளைஞர்களுக்கு வேலையை வழங்குவோம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்தெந்த போலீச் தூகக்ணும்னு ஞாபகம் இருக்கு என உதயநிதி அண்மையில் பேசியிருந்த நிலையில், திமுக நிர்வாகியும் பேசியது அதிர்ச்சியடை வைத்துள்ளது.

இன்னும் அஞ்சு மாசம் அஞ்சுமாசம்னு சொல்லி திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும், திமுக உயர்மட்ட தலைவர்கள் வாயில் வடை சுடுவதே வேலையாக உள்ளது என நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Views: - 40

0

0