மருத்துவரை செவிலியர் தாக்கிய விவகாரம் : ஜிப்மர் மருத்துவர்கள் அமைதிப் பேரணி!!

4 September 2020, 1:10 pm
Jipmer Protest - Updatenews360
Quick Share

புதுச்சேரி : பணியின் போது மருத்துவரை தாக்கிய ஆண் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்காத ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மருத்துவர்கள் அமைதி பேரணி நடத்தினர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் கடந்த 31ம் தேதி பணியில் இருந்த மருத்துவர் ஒருவருக்கும் ஆண் செவிலியர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செவிலியர் மருத்துவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பணி பாதுகாப்பு கோரி ஜிப்மர் மருத்துவர்கள் கடந்த 2 ஆம் தேதி அரை மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் இதுவரை மருத்துவரை தாக்கிய ஆண் செவிலியர் மீது ஜிப்மர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று 50 க்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அமைதி பேரணி நடத்தினர்.

மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

Views: - 5

0

0