பள்ளிக்கூடமாக மாறிய நாடக மேடை: ஆசிரியராக மாறிய கல்லூரி மாணவிகள்…குவியும் பாராட்டு!!

9 July 2021, 5:37 pm
College Girls Teachers - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுப் பள்ளிகள் இயங்காததால் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்காக நாடக மேடையை பள்ளியாக மாற்றி கல்லூரி மாணவிகள் கல்வி கற்பித்து வரும் சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சி சின்னழகநாயக்கனூரில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவ மாணவிகளின் கல்வித் திறன் காணாமல் போய்விடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சின்னழக நாயக்கனுரைச் சேர்ந்த வெண்ணிலா மற்றும் அருகிலுள்ள காமராஜபுரம் கல்லூரி மாணவி ஜெயமணி ஆகிய இரண்டு கல்லூரி மாணவிகள் இணைந்து கிராமப்புற மாணவ மாணவிகளின் கல்வி அறிவை மேம்படுத்த அந்த கிராமத்தில் இருந்த நாடக மேடையை பள்ளியாக மாற்றி நாள்தோறும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கத் தொடங்கினர்.

அந்த கிராமத்தில் பொதுமக்களும் இந்த இரண்டு மாணவிகளுக்கு ஆதரவளித்து ஊக்குவித்த நிலையில் நாள்தோறும் வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி சேவை உள்ளத்தோடு சிறுவர் சிறுமிகளின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் கடந்த நான்கு மாத காலமாக வெண்ணிலா மற்றும் ஜெயமணி ஆகிய இரண்டு மாணவிகளின் இந்த செயலை அனைவரும் பாராட்டுகின்றனர்.

மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருள்களை வழங்குவதால் மாணவ மாணவிகள் தங்களிடம் ஆர்வமாக கல்வி கற்பதற்கு வருகின்றனர் என பெருமையுடன் கூறுகின்றனர் கல்லூரி மாணவிகள்.

Views: - 168

0

0