ராமநாதபுரத்தில் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை: ஐ.என்.எஸ். கடலோர காவல்படையினர் அறிவிப்பு..!!

2 July 2021, 11:22 am
Quick Share

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திலிருந்து 3 கி.மீ சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ். கடலோர காவல்படையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திலிருந்து 3 கி.மீ சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட அனைத்து வித ஆள்இல்லா விமானங்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி எந்தவித ஆள் இல்லா விமானங்கள் இயங்கினாலோ அல்லது பறந்தாலோ எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தகர்க்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும். மேலும் அதனை இயக்கியவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 82

0

0