மாவட்டம் – மாவட்டம் இபாஸ் கட்டாயம் முறையை ரத்து செய்க : தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை!!

6 August 2020, 2:32 pm
Stalin 02 updatenews360
Quick Share

சென்னை : மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் கட்டாயம் என்ற முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இ- பாஸ்‌ முறையை நீட்டித்து மக்களை துன்புறுத்தி வருவது அடுக்கடுக்கான எதிர்‌ விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஐந்தாவது மாதமாக அவசரத்‌ தேவைகளுக்குக்‌ கூட மக்கள்‌ நகர முடியாமல்‌ அல்லல்களுக்குள்ளாக்கப்‌படுகிறார்கள்‌

திருமணம்‌, மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசரத்தேவைகளுக்கு விண்ணப்பிக்கும்‌ இ- பாஸ்‌ கூட பல
முறை நிராகரிக்கப்படுகிறது. தமிழகம்‌ முழுக்கவும்‌ இ-பாஸ்‌ வழங்குவதில்‌ தாராளமாக ஊழல்‌ அரங்கேறி வருகிறது. ஊழல்களுக்கும்‌, முறைகேடுகளுக்கும்‌ வித்திடும்‌- வெளிப்படைத்தன்மை இல்லாத இ-பாஸ்‌ நடைமுறை ஊரடங்கில்‌ யாருக்குப்‌ பயன்படுகிறது?

அமைச்சர்களும்‌, முதலமைச்சரும்‌ போனால்‌ போதும்‌, வயிற்றுப்‌ பிழைப்பு தேடுவோர்‌, இறுதிச்‌ சடங்கில்‌ பங்கேற்போர்‌ கூட போக வேண்டியதில்லை என்ற முரட்டு மனநிலை அரசுக்கு அழகல்ல! மத்திய அரசே இ-பாஸ்‌ நடைமுறை கட்டாயம்‌ இல்லை என்று அறிவித்த பிறகு, அரசு உள்‌ நோக்கத்துடன்‌ வைத்திருப்பது ஏன்‌?

வேலைக்குப்‌ போகலாம்‌, கம்பெனிகள்‌ திறக்கலாம்‌ என அறிவித்துள்ள நிலையில்‌ மக்களை வீட்டுக்குள்ளே முடக்கும்‌ இ-பாஸ்‌ கட்டாயம்‌ என்று அறிவித்திருப்பது என்ன வகை கொரோனா நிர்வாகம்‌?

Views: - 0 View

0

0