கொரோனா காலத்தில் மக்களை நேரில் சந்தித்து உதவியது எடப்பாடியார் ஆட்சி: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்

Author: Udhayakumar Raman
17 March 2021, 10:20 pm
Quick Share

கோவை: கொரோனா காலத்தில் மக்களை நேரில் சந்தித்து உதவியது எடப்பாடியார் ஆட்சி என்றும், திமுக ஸ்டாலின் விக்கு வைத்து அறைக்குள் அமர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் கோவையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியுள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியில் வடக்கு சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம், மற்றும் செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேசிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வடக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அம்மன் கே அர்ஜுனனை அறிமுகம் செய்து வைத்து ஆலோசனைகள் வழங்கினார், மேலும் இந்த விழாவில் பேசிய உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, இந்த தொகுதியில் அம்மன் அர்ஜுனன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெருவார்.

இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் சுற்றிவேலை பார்க்கும் எளிமையான வேட்பாளர். கூட்டணி கட்சியை மதித்து பணியாற்றக் கூடியவர்கள் அதிமுக தொண்டர்கள். கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் வளர்ச்சியை கொடுத்தது அதிமுக அரசு, சாலை மேம்பாட்டு திட்டங்கள், மேம்பாலங்கள், குடிநீர் வசதிகள், என்று வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் பணியாற்றுயுள்ளோம். கல்வி கடன் உட்பட அனைத்தும் தள்ளுபடி என்று அறிவித்து வெற்றிபெற்ற திமுக எங்கே இருக்கு என்றே தெரியவில்லை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவை கோவையில் அமைத்துள்ளோம். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற்று தந்துள்ளோம், அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் அதிகமான மக்களுக்கு வீடுகள் கட்டிகொடுத்து கோவை மாவட்டத்தில்தான்.

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது திமுக, கட்சதீவு, காவிரி நீர், பிரச்சினை என்று அனைத்தயும் விடுக்கொடுத்தது, அதிமுக அனைத்தையும் மீட்டுக்கொண்டு இருக்கின்றது. கொரானா காலத்தில் மக்களை நேரில் சந்தித்து உதவியது எடப்பாடியார் ஆட்சி, திமுக ஸ்டாலின் விக்கு வைத்து அறைக்குள் அமர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார். மக்களுக்காக, வாஷிங் மிசன், அனைவருக்கும்வீடு, என்று பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். எடப்பாடியார் சொன்னால் செய்வார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது வெற்றிக்காக பாடுபட்டு மீண்டும் தமிழகத்தில் அதிமுக அரசு அமையும், அம்மன் அர்ஜுனன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 64

0

0