இ.எம்.ஐ கேட்டு வாய்க்கு வந்த மாதிரி திட்டுறாங்க : கதறும் சாமானியர்கள்..!
8 September 2020, 4:11 pmகோவை : வாங்கிய கடனுக்கு மீறி வட்டி கேட்பதாகவும் தகாத வார்த்தைகளில் திட்டுவதாக வட்டி வசூலிப்பர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வருவாய் இழந்த பலரில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த இந்த சாமானியர்கள் வாழ்க்கை மீண்டும் துவங்கி சில நாட்களே ஆகியுள்ள சூழலில் மீண்டும் அவர்களை வாட்டத் துவங்கியுள்ளது இ.எம்.ஐ.
வாங்கிய கடனுக்கு வட்டி மீது வட்டி வசூலிப்பதாகவும், தாங்கள் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதாகவும் கூறி தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள்
கடன் தொகையை கட்டுவதற்கான சலுகை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி முடிந்துவிட்டதாக கூறி, அடுத்த சில நாட்களிலேயே 6 மாத நிலுவை தொகையை செலுத்த கூறி நிர்பந்திப்பது தற்கொலைக்கு தூண்டுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பல மாதங்களாக வருவாய் இழந்து தற்போது மீண்டும் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் இவர்களுக்கு தனியார் நிதி நிறுவனங்களும் அரசும் நல்லதொரு வழியை காட்ட வேண்டும் என்பதே லட்சக்கனக்கான ஓட்டுநர் குடும்பங்களின் கோரிக்கையாக உள்ளது.
0
0