அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் : அதிமுகவினர் கொண்டாட்டம்!!

15 September 2020, 11:04 am
Erode admk Celbrates -updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் அறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா அ.இ.அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

இன்று தமிழகமெங்கும் அண்ணா பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அ.இ.அதிமுகவினர் அண்ணா திருவுருவ சிலைகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றிற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் முன்பு பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0