ரயில்வே பாலத்தின் தூண் இடிந்து லாரி மீது விழுந்ததால் பரபரப்பு : பெரும் விபத்து தவிர்ப்பு!!

Author: Udayachandran
5 October 2020, 12:48 pm
Tiper Lorry Acc - updatenews360
Quick Share

கோவை : காரமடை ரயில்வே பாலத்தில் உள்ள இரும்பு தூண் உடைந்து லாரி மீது விழுந்த நிலையில் ஓட்டுநர் அதிர்ஷடவசமாக தப்பினார்.

கோவை காரமடை அருகே ஆசிரியர் காலனியில் இருந்து டி.ஜி.புதூர் செல்லும் சாலையின் இடையே ரயில்வே பாலம் உள்ளது. இங்கு பாலத்தின் இரு பகுதிகளிலும் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் ரயில்வே துறை சார்பில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி மகன் மதியழகன் (வயது 31) என்பவர் டிப்பர் லாரியில் மங்கலக்கரைபுதூர் பகுதியிலுள்ள தனியார் கிரசரில் மண் எடுக்க இந்த வழியாக வந்துள்ளார். அப்போது ஜே.ஜே.நகா் பகுதியிலுள்ள ரயில்வே பாலத்தை கடக்கும் போது ரயில்வே பாலத்தின் இரும்பு தடுப்பு வேலி திடீரென முறிந்து டிப்பர் லாரியில் டிரைவர் அமர்ந்திருக்கும் மேல்தளத்தில் விழுந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படாமல் அவர் லாரியில் இருந்து தப்பித்து வெளியில் லாவகமாக குதித்தார். இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் தொங்கி கொண்டிருந்த இரும்பு தடுப்பு ராடை பார்வையிட்டனர்.

மேலும் அதிகாரிகளின் உத்தரவையடுத்து லாரியின் மேல் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு ராடை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இரும்பு ராடு விழுந்தபோது அவ்வழியாக வேறு யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Views: - 76

0

0