குவியல் குவியலாக கிடந்த காலாவதியான குளிர்பானங்கள் : யார் பொறுப்பு..? உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை…

Author: Babu Lakshmanan
11 October 2021, 8:23 pm
Quick Share

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே ஒரு வீட்டின் பின்புறம் குவியல் குவியலாக காலாவதியான குளிர்பானங்கள் கிடைப்பதாக வந்த தகவலையடுத்து, உணவுப்பொருள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுபாஷ் நகர் அருகே ஒரு வீட்டின் பின்புறம் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலாவதியான குளிர்பான பாட்டில்கள் கிடப்பதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் தங்கசிவம் மற்றும் ஆரல்வாய்மொழி சுகாதார ஆய்வாளர் அன்வர் அலி ஆகியோர் மொத்தமாக குவிந்து காணப்பட்ட குளிர்பானங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், அவற்றை அழித்த அதிகாரிகள், கொரோனா காலத்தில் விற்பனைக்காக வாங்கப்பட்ட குளிர்பானங்கள் ஊரடங்கு காரணமாக விற்பனையாகாததால் தனியார் ஏஜென்சிகள் இவ்வாறு குளிர்பானங்களை வீதியில் கொட்டியிருக்காலம் என்ற சந்தேகத்தில் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 529

0

0