வேளாண் பொருட்கள் வாங்க முடியாமல் வறுமையில் தவிக்கும் விவசாயி: உழவு பணிக்கு சைக்கிளை பயன்படுத்தும் தந்தை-மகன்..!!

Author: Aarthi Sivakumar
28 June 2021, 11:45 am
Quick Share

திருவள்ளூர்: திருத்தணி அருகே உழவு பணிக்கு சைக்கிள் பயன்படுத்தும் தந்தை-மகனின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பங்கி பூ பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றார். வறுமையின் பிடியில் சிக்கி உழவு பணிக்கு பயன்படுத்த இயந்திரங்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது சைக்கிளை உழவு இயந்திரமாக பயன்படுத்தி அதனை தனது 11 வயது மகனை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு உழவு பணிகளை மேற்கொண்டு வருகிறார் . கொரோனா காலத்தில் விவசாயிகளையும் அவர்களது வறுமையை கருதி அரசு மானிய விலையில் எந்த ஒரு ஆவணமும் எதிர்பார்க்காமல் விவசாய இயந்திரங்கள் வாடகைக்கு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

11 வயது உடைய சிறுவன் தனது தந்தையுடன் வயலை உழுவதற்கு உரிய இயந்திரம் இன்றி இருப்பதை வைத்து தங்களது மிதிவண்டி மூலம் மாடுகளுக்கு பதிலாக தாங்களாகவே உழைத்து வியர்வை சிந்தி உழவு செய்து நூதன முறையில் சிறப்பாக விவசாயம் செய்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Views: - 274

0

0