பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: தொழிலாளர் ஒருவர் காயம்

Author: Udayaraman
5 October 2020, 10:27 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள கங்கர்செவல்பட்டி கிராமத்தில் தாயில்பட்டியைச் சேர்ந்த சௌந்திரராஜன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை லைசன்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாள்கள் சரவெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் சரவெடி வளையம் வெயிலில் உலர்த்தும் போது பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கீழத்தாயில்பட்டியை சேர்ந்த பிச்சைக்கனி மகன் ரஞ்சித் (22) என்பவருக்கு 50 சதவிகித தீக்காயம் ஏற்பட்டது.

அவரை சிவகாசி மருத்துவமனைக்கு சிரிச்சைக்காக கொண்டு சென்றனர் சம்பவ இடத்திற்கு வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலையின் போர்மேன் கங்கர் செவல் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 33

0

0