20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா : ஒற்றுமையை வளர்த்த 18 கிராமங்கள்!!

18 July 2021, 1:45 pm
Fish Fest - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : ஒற்றுமையை வளர்க்கும் மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான ஆண், பெண், இளைஞர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மீன்களை பிடித்தனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அடியனூத்து ஊராட்சி இப்பகுதியில் உள்ளது.நல்லாம்பட்டி. முனியப்பன்கோயில் உள்ளது. இந்த முனியப்பன் கோயில் திருவிழா என்பது அனைவரையும் ஒற்றுமையாக அதேபோல் சொந்த பந்தங்களை இணைக்கும் திருவிழா கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

அதன் பிறகு இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இப்பகுதியில் உள்ள ராஜா குளத்தில் மீன்களை பிடிப்பது தான் மிகப்பெரிய திருவிழாவாகும். நல்லாம்பட்டி உட்பட 18 கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

நல்லாம்பட்டி, வாழைக்காய் பட்டி, கண்ணா பட்டி,வேடபட்டி உட்பட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்துகொண்டு ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் முதியவர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தார்கள்.

குளத்தில் உள்ள மீன்கள் கட்லா, ஜிலேபி, ரோகு உட்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோ முதல் 7 கிலோ வரை மீன்களை பிடித்து சென்றனர் .

இதில் முக்கிய நிகழ்வாக இவர்கள் பிடித்து சென்ற மீன்களை வீட்டில் சமைத்து உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சொந்தங்களை அழைத்து உணவு பரிமாறி ஒற்றுமையை ஏற்படுத்துவது இந்த திருவிழாவின் நோக்கம் . மீன்பிடி திருவிழா இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 155

0

0