ஊருக்குள் நுழைந்த காட்டெருமை தாக்கி வன ஊழியர் படுகாயம் : நடமாட்டத்தை கண்காணிக்கும் போது விபரீதம்!!

20 July 2021, 8:04 pm
Bison Attack -Updatenews360
Quick Share

கொடைக்கானல் : காட்டெருமைகள் ஊருக்குள் உலா வருவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக வன ஊழியர் காயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில வருடங்களாகவே காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் உலா வருவது வழக்கமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வரும் இந்த காட்டெருமைகள் ஊருக்குள் உலா வருவதை தடுக்கும் பொருட்டு 24 மணிநேர கண்காணிப்பில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பல்வேறு குழுக்களாக பிரிந்து இருக்கக்கூடிய இந்த வன ஊழியர்கள் காட்டெருமைகள் நடமாட்டத்தை கண்காணித்து மீண்டும் அதை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு காட்டெருமைகள் நடமாட்டத்தை கண்காணிக்க காத்திருந்த தற்காலிக ஊழியர் காட்டெருமையை விரட்ட முயன்ற போது கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

Views: - 87

0

0