முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அப்போலாவில் அனுமதி : உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2021, 10:30 am
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு 11,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் கடந்த அதிமுக ஆட்சியில் 5 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார், மேலும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வயிற்று வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
0