தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் : முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 12:19 pm
Ramamurthy Dead- Updatenews360
Quick Share

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 87. இதனையடுத்து,அவரது உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது.

1934 ஆம் ஆண்டில் பிறந்த திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள்,1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான இருந்தார்.1976 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினராக இருந்தார்.

1981 முதல் 1984 ஆம் ஆண்டு வரையில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டிவனம் ராமமூர்த்ரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதே போல, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 417

0

0