கோவை கிளப்பில் சூதாட்டம் : 36 பேர் அதிரடி கைது!!

16 January 2021, 5:39 pm
cbe Club Card arrest - Updatenews360
Quick Share

கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கிளப் ஒன்றில் சூதாடிய 36 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் சாரதி நகர் பகுதியில் உள்ள ரெயின்ட்ரீ கன்ட்ரி கிளப் ,என்ற கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிங்காநல்லூர் போலீசார் சோதனை நடத்தினர். முதல் தளத்தில் சூதாட்டம் நடப்பது தெரிந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்து 56 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். கிளப் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கோவை சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கூறுகையில்:- குறிப்பிட்ட கிளப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான அனுமதி பெற்று உள்ளது. ஆனால் அங்கு சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்கிறார்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளப்பில் ஒரே நேரத்தில் 50- க்கும் மேற்பட்டோர் அமர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட கூடிய அளவுக்கு வசதி உள்ளது. மது உள்ளிட்ட போதைப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதற்கேற்றார்போல பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும். இங்கு பண பரிமாற்றங்கள் அனைத்தும் டோக்கன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பிங்க் நிறத்தில் 5, 10, 20 என்ற எண்கள் பொறிக்கப்பட்ட டோக்கன்கள் பயன்படுத்தப்பட்டன. சீட்டுக் கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சூதாட்ட கிளப் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கிளப் வாசலில் எப்போதும் போலீசாரை நடமாட்டத்தை கண்காணிக்க பவுன்சர் எனப்படும் பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த கிளப் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ளது.

Views: - 3

0

0