“ஆசிட் அடித்து விடுவேன்”… பிரபல பாடகிக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் கணவர்..!
Author: Mari7 January 2022, 3:44 pm
ஆண்களுக்கு மத்தியில் தனது தனித்த குரலால், பல மேடைகளில் கானா பாடல்களில் பாடி வருபவர் தான் இசைவாணி. அடித்தட்டு மக்களின் ஏற்றத்தாழ்வுகளை தன்னுடைய பாடல்கள் மூலம் எளிமையாக புரிய வைக்கிறார்.
இவருடைய பாடல்கள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியான சார்பட்டா திரைப்படத்தில் இவர் பாடிய “பச்ச கல்லு மூக்குத்தி” என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்தது.
இந்த நிலையில் தனியயார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சில வாரங்கள் கழித்து அந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார்.
கானா பாடகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டர் இசைவாணி, தற்போது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இசைவாணி.
அதில், விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ், இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும் குற்றம் சாட்டிய அவர், தனக்கும் தன் கலை பயணத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக கூறியுள்ளார். மேலும் “ஆசிட் அடித்து விடுவேன்” என மிரட்டுவதாகவும் புகார் மனுவில் இசைவாணி தெரிவித்துள்ளார்.
0
0