‘நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்’: தொடர்ந்து 6வது நாளாக தங்கம் விலை சரிவு..!!

13 January 2021, 12:55 pm
Gold rate5 - updatenews360
Quick Share

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 6 நாட்களில் சவரனுக்கு ரூ.1,664 அளவுக்கு குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 7ம் தேதி முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 7ம் தேதி சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது. 8ம் தேதி சவரனுக்கு ரூ.408 குறைந்து ஒரு சவரன் ரூ.38,032க்கு விற்கப்பட்டது. 9ம் தேதி சவரனுக்கு ரூ.432 குறைந்து ஒரு சவரன் ரூ.37,600க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 3 நாட்களில் சவரன் ரூ.1,480 அளவுக்கு குறைந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட் விடுமுறை. அதனால், விலையில் மாற்றம் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்கப்பட்டது.

ஒரு நாள் விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை மீண்டும் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதிலும் தங்கம் விலை சரிவையே சந்தித்தது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4680க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.37,440க்கு விற்கப்பட்டது. அதே போல் நேற்று காலை சவரனுக்கு ரூ.24 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.24 அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.4,677க்கும் சவரனுக்கு ரூ.24 குறைந்து சவரன் ரூ.37,416க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றுடன் சேர்த்து தொடர்ச்சியாக 6 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை குறைவு நகை வாங்க நினைப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 7

0

0