வார இறுதியையும் சரிவுடன் முடித்த தங்கம் : கிராம் ரூ.4,500க்கு கீழ் குறையுமா..?

28 November 2020, 11:35 am
gold - updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.38 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்படுகிறது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்திற்கு கீழாக சென்றது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,574-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 சரிந்து ரூ.36,592-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.