பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை ஊழியர் : வீடியோவால் சஸ்பெண்ட்!!

By: Udayachandran
5 October 2020, 8:59 pm
Udumalpet Govt Hosp- Updatenews360
Quick Share

திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனையில், பிரேதப்பரிசோதனைக்கு, லஞ்சம் வாங்கும் ஊழியரின் வீடியோ, ‘வைரலாகி’ வருகிறது.

திருப்பூர் மாவட்டம்,உடுமலை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்ய, துணி, பெனாயில் உள்ளிட்டவற்றுக்கு, 3,000 ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது. 1,500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பரிசோதனை செய்ய முடியும் என, ஊழியர் ஒருவர் ‘கறார்’ லஞ்ச வசூலில் ஈடுபடும் காட்சிகள், சமூக வலை தலங்களில் வைரலாகி வருகின்றன.

உடுமலை பகுதியில் கணவர், மனைவி இருவர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்கு வந்த போது, அரசு மருத்துவமனை மருந்தாளுனர் லஞ்சப்பணம் மற்றும் மது பாட்டில்களை மிரட்டி கேட்டு வாங்குகிறார்.

அந்த வீடியோவில், ‘ஏழைகள்… இரு சடலத்துக்கும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் பணம் இல்லை; அனுசரித்து பெற்றுக்கொண்டு நல்ல படியாக முடித்து தாருங்கள்’ என, உடன் வந்தவர்கள், பேச்சு நடத்துவது போல், காட்சி உள்ளது. பின், அந்த ஊழியர் தொகையை பெற்று, தனது டேபிள் விரிப்புக்கு கீழ், பணத்தை வைக்கிறார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி வருகிறது.

பொதுமக்கள் கூறுகையில்,’அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கும் லஞ்சம் என்ற நிலை உள்ளது. இரு சடலங்களுக்கும், மருந்தாளுனர், தலா, 1,500 வீதம், 3,000 ரூபாய் வாங்கியுள்ளார். அங்கிருந்தவர்களிடம் வசூலித்து, 3,000 ரூபாய் கொடுக்கப்பட்டது’ என்றனர்.இது குறித்து, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சாந்தியிடம் கேட்டபோது,”சம்பந்தப்பட்ட மருந்தாளுனர் மாதவன் மீது, தலைமை மருத்துவ அலுவலர் மூலம் அறிக்கை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இது தொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வெளியானதையடுத்து மருந்தாளுனர் மாதவனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 47

0

0