பாஜக இளைஞரணி தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்ட துப்பாக்கி: மதுரையில் நடந்த விழாவில் பரபரப்பு…

5 September 2020, 10:04 pm
Quick Share

மதுரை: மதுரையில் பாஜக கட்சி நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி தலைவருக்கு துப்பாக்கி பரிசாக கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக புதிய இளைஞரணி மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருப்பாலை இஎம்ஜிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக சிறுபான்மை இளைஞரணி மண்டல தலைவரான தேவகிரி சால்கா என்பவர் துப்பாக்கியை பரிசாக கொடுத்துள்ளார். அவர் மதுரை அய்யர்பங்களாவில் அரசு உரிமத்தோடு ஏர்கன் தயாரிக்ககூடியவர் என்றும்,

அதன் காரணமாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வத்திற்கு அந்த ஏர்கன்னை நினைவு பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.பொதுவாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர்களுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்படும் நிலையில், பாஜகவினர் சற்று வித்தியாசமாக இந்த ஏர்கன்னை பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பாதரச குண்டுகள் வைத்து சுடக்கூடிய துப்பாக்கி எனவும், உண்மையான துப்பாக்கி இல்லை எனவும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0