குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது: கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்
Author: kavin kumar12 October 2021, 12:09 am
கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் தடைசெய்யபட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த ஒருவரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கோவையில் திருட்டு, வழிபறி, கொள்ளை, மற்றும் போதைபொருள் புழக்கம் அதிகரித்து வருவதை அடுத்து கோவை மாவட்டத்தில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவை சுந்திராபுரம் பகுதியிலிருந்து கரும்புக்கடை வழியாக கோவை மாநகர பகுதியை நோக்கி “டாட்டா ஏஸ்” என்ற சிறியரக சரக்கு வாகனம் அதிவேகமாக வருவதாக கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட உத்திரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோவை கரும்புக்கடை பகுதியில் கோவை உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் தலைமையிலான போலீசார் வேகமாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதில் வாகனத்தை ஓட்டிவந்த நபர் வாகனத்தை நிறுத்திவிடு தப்பி ஓடினார். மேலும் வாகனத்தில் இருந்த மற்றொரு நபர் போலீ சாரிடம் பிடிபட்ட நிலையில் வாகனத்தை சோதனை செய்ததில் சரக்கு வாகனம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட, குட்கா, பான்மசாலா உட்பட போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்ததுள்ளது. அதன் மதிப்பு சுமார் 5 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என தெரிய வருகிறது. மேலும் போலீசாரிடம் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகுதான் எங்கிருந்து, தடைசெய்யப்பட்ட குட்காபொருட்களை கொண்டுவரப்பட்டது. இதன் பின்னனியில் யார் உள்ளார்கள் என்ற தகவல்கள் வெளிவரும் மேலும் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு கணக்கிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
0
0