“இன்னைக்கும் ஹேப்பிதா“ : மீண்டும் குறைந்தது தங்கம் விலை!!

27 November 2020, 11:18 am
Gold Rate - Updatenews360
Quick Share

தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.296 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.38 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்படுகிறது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்திற்கு கீழாக சென்றது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,576-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.296 சரிந்து ரூ.36,608-க்கு விற்பனையாகிறது.

அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 40 காசுகள் குறைந்து ரூ.64.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரம் தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. தொடர்ந்து தங்கம் விலை குறைவால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வாம் காட்டி வருகின்றனர்.

Views: - 0

0

0