இடியுடன் பெய்த கனமழை : காற்றாலையில் தீ பிடித்து எரிந்து நாசம்!!

5 November 2020, 11:05 am
Wind Mill Fire - Updatenews360
Quick Share

நெல்லை : நேற்று இடியுடன் பெய்த கனமழைக்கு காற்றாலையில் தீபிடித்து முற்றிலுமாக எரிந்து நாசமானது.

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் அதிகளவில் காற்றாலைகள் உள்ளன இந்தப்பகுதியில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய உகந்த இடமாக இருக்கிறது. குறிப்பாக பணகுடி அருகே உள்ள ஆவரைகுளம் குமாரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காற்றாலை நிறுவனங்கள் உள்ளன.

இந்த காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை பணகுடி பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. குமாரபுரம் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் காற்றாலை ஒன்று தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு காற்றாலை முழுவதும் பற்றி எரிந்து கருமையாக இருந்தது.

இதனை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த தீயணைப்பு அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் காற்றாலையின் ஒரு பகுதி முழுவதும் முற்றிலும் சேதமானது. இது குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 15

0

0