தமிழகத்தில் தொடரும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?..முழு விவரம் இதோ..!!

Author: Aarthi Sivakumar
4 December 2021, 9:37 am
pondy school leave - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக இன்று தென்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதற்கிடையில், தென் மாவட்ங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தொடர் கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Views: - 434

0

0