திண்டுக்கல் அருகே கோவில் சிலைகள் உடைப்பு : போதை இளைஞரை கைது செய்த போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2022, 12:49 pm
Idol Broke Arrest -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே மதுபோதையில் விநாயகர் கோவிலில் இருந்த சிலைகளை உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த வடமதுரை அருகே உள்ள கத்தாளகுரும்பபட்டியில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இன்று கோயிலில் இருந்த சாமி கற்சிலைகள் உடைக்கப்பட்டு கோயிலின் வெளியே வீசப்பட்டு இருந்தது

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நாவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற வாலிபர் நேற்று இரவு கோவில் முன்பு மது அருந்தி கொண்டிருந்ததாகவும், மது போதையில் இருந்த பாலகிருஷ்ணன் கோவிலில் இருந்த சிலைகளை உடைத்து வீசியதும் தெரியவந்தது

அதனைத் தொடர்ந்து போலீசார் பாலகிருஷ்ணனிடம் விசாரணை செய்த போது மதுபோதையில் சிலைகளை உடைத்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அதன் பின்பு அவன் மீது வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மது போதையில் கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 336

0

0