நான் தற்கொலை செய்தால் விவசாய தலைவர் அய்யாக்கண்ணும், அரசு அதிகாரிகளும் தான் பொறுப்பு : பெண் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2021, 10:48 am
Women Complaint -Updatenews360
Quick Share

திருச்சி : நான் தற்கொலை செய்து கொண்டால் விவசாய தலைவர் அய்யாக்கண்ணு, அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு என பெண் புகார் தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சபரிநாதன் என்பவருக்கு சேவியர் குத்தகைக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சபரிநாதனுக்கு நிலத்தை குத்தகைக்கு விட்ட சேவியர் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரான ரெனிடா, அந்த நிலத்தை கேட்டதற்கு சபரிநாதன் எடுத்துக் கொடுக்க மறுத்து மிரட்டி வருகிறார்.

மேலும், தனிநபர் இடத்தை ஆக்கிரமித்த அந்த நபருக்காக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பாதிக்கப்பட்ட குடும்பத்தை மிரட்டுவதாக வருவதாக அப்பெண் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உள்ளோம் எனவும் தங்களது தற்கொலைக்கு விவசாய தலைவர் அய்யாக்கண்ணுவும், அரசு அதிகாரிதான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 258

0

0