ரூ.500க்கு மீன் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் FREE… ஆனா மாஸ்க் முக்கியம் : நூதன முறையில் ஆடி ஆஃபர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2021, 3:43 pm
Fish Audi Offer - Updatenews360
Quick Share

மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி 500 ரூபாய்க்கு மீன் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இறைச்சி கடைக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆடி மாதம் என்றாலே இறைச்சி விற்பனை அதிகளவில் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள நிலையில் அதனை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஜவுளிக்கடைகள் அறிவிக்கும் ஆடிச் சலுகை போல மதுரையில் இறைச்சிகடை ஒன்று வெளியிட்டுள்ள தள்ளுபடி அறிவிப்பானது பேசுபொருளாகியுள்ளது.

மதுரை பீபீகுளம் பகுதியில் உள்ள மீன் இறைச்சி கடையில் ஒன்று தங்களது வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்துவந்து உரிய சமூக இடைவெளியை பின்பற்றி 500 ரூபாய்க்கு மேல் மீன் இறைச்சி வாங்கினால் அந்த வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக இன்று ஒரு நாள் வழங்கி வருகிறது.

சாதாரண நாட்கள் போன்று நண்டு, இறால், வஞ்சிரம் மீன், போன்றவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடையில் 500ரூபாய்க்கு மேல் மீன் இறைச்சி வாங்குபவர்களுக்கான ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கன் வழங்கப்பட்டு அதனை இன்று மட்டுமே பயன்படுத்தும் வகையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒருநாள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த தள்ளுபடி தங்களின் வாடிக்கையாளர்களை மனநிறைவு அடைய செய்வதற்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் என கடையில் பணிபுரியும் பணியாளர்கள் தெரிவித்தனர்

கடந்த ஞாயிற்றுகிழமை செல்லூர் பகுதியில் பிரியாணி கடையில் 5பைசாவிற்கு அறிவிக்கப்பட்ட பிரியாணி சலுகையால் ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்து கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இறைச்சி கடை ஒன்று அறிவித்துள்ள தள்ளுபடி அறிவிப்பானது வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 253

0

0