ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் : 2 நாட்களுக்கு பின் சடலம் மீட்பு!

Author: Udayachandran
8 October 2020, 10:51 am
Tirupur 3 Dead - updatenews360
Quick Share

திருப்பூர் : பொங்கலூர் வாய்க்காலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்னபூரணி.இவரது கணவர் இறந்த நிலையில் தனது இரண்டு மகள்கள் சரண்யா , தேவி ஆகியோருடன் வசித்து வந்த நிலையில், தேவிக்கு சேதுபதி என்பவருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்நிலையில் அனைவரும் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்காலுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

அன்னபூரணி கரையில் இருந்த நிலையில் சரண்யா,தேவி இருவரும் நீரில் இறங்கு குளித்து கொண்டிருந்தனர். அப்பொழுது சரண்யா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற தேவியும் சேதுபதியும் அடுத்தடுத்து நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்னபூரணி அருகில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்தார்.அதனை தொடர்ந்து காமநாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் கிடைத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மூவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் தேவியின் உடல் கொண்டாராம் பாளையம் பகுதியில் நேற்றைய தினம் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இருவரின் உடலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை அவிநாசி பாளையம் அருகே பிஏபி வாய்க்காலில் சரண்யா மற்றும் சேதுபதியின் உடல் மீட்கப்பட்டது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இரண்டு நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு தீயணைப்புத் துறையினரால் 3 பேரின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Views: - 41

0

0