வீடுகளில் ரமலான் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் : குடும்பத்துடன் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2021, 10:22 am
Trichy Ramzan - Updatenews360
Quick Share

திருச்சி : சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர் வீடுகளில் ரமலான் தொழுகையில் ஈடுப்பட்டனர்.

உலக முழுவதும் கொரனா நோய்தொற்று பாதிப்பினால் அனைத்து மத வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரனா நோய்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இஸ்லாமியர் ஈகைத் திருநாளான ரமலான் நோன்பை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்களில் தொழுகை நடத்த அனுமதி இல்லாததால் இஸ்லாமியர்கள் தங்களுடைய வீடுகளில் தொழுகையை மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள அல்லிமால் தெருவில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்துடன் ரமலான் தொழுகையில் ஈடுபட்டார்.

பின்னர் ஒருவருக்கு ஒருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ரமலான் தொழுகையில் சமூக இடைவெளி வலியுறுத்தும் வகையில் சமூக இடைவெளி விட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

Views: - 139

0

0