தமிழகத்தில் பள்ளிகள் திறக்க சாத்தியமே இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்…

31 October 2020, 4:41 pm
Minister Sengottayan- Updatenews360
Quick Share

ஈரோடு : பள்ளிக்கள் திறப்பிற்கு தற்போது சாத்தியமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி ரூ 1.79 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜையுடன் பணியை தொடங்கிவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கவர்னர் பாராட்டும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவபடிப்பிற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீட்தேர்வு பயிற்சி பெற நேற்று வரை 9,842 பேராக இருந்து இன்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தாண்டு 5.25 லட்சம் பேர்கள் தனியார் பள்ளிலிருந்து அரசு பள்ளியில் சேர்ந்துளனர்.

பள்ளிக்கள் திறப்பிற்கு தற்போது சாத்தியமில்லை எனவும் பள்ளி திறப்பு குறித்து முதல்வர் தான் அறிவிப்பார் என தெரிவித்தார். இந்திய மருத்துவ கழகத்தின் பரிந்துரைப்படி திறந்த வெளி பள்ளிகள் செயல்படுத்தினால் பனி மற்றும் வெயிலினால் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.

நீட் தேர்விற்கு வகுப்புகள் இன்றும் ஒரிரு நாளில் விரைவில் தொடங்கப்படும். இந்தாண்டு முழுமையான பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்விழாக்களில் கோட்டாட்சியர் ஜெயராமன் தாசில்தார் தியாகராஜு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Views: - 21

0

0