பொழுதுபோக்கிற்காக தான் கமல் கோவைக்கு வருகிறார்: பாஜக மாவட்ட தலைவர் விமர்சனம்..!

Author: Udayaraman
4 August 2021, 8:22 pm
Quick Share

கோவை: கமலஹாசன் அவரது பொழுதைபோக்கவே கோவை வருவதாக பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக., மாவட்ட தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த மூன்று மாத காலத்தில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பல்வேறு நல உதவிகளை மக்களுக்கு செய்துள்ளார். குறிப்பாக கொரோனா காலத்தில் கோவைக்கு தடுப்பூசிகளை அதிகமாக தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியது, கோவை அரசு மருத்துவமனைக்கு அமரர் ஊர்தி வழங்கியது, தடுப்பூசி மையங்களில் ஆய்வு மேற்கொண்டது, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையையும் மத்திய அமைச்சர்களுக்கு கொண்டு சென்றது ஆகியவற்றை மேற்கொண்டுள்ளார்.

கமல்ஹாசன் மூன்று மாதத்திற்கு முன்பு கோவைக்கு படப்பிடிப்பிற்காக வந்தார். அதனைத் தொடர்ந்து மூன்று மாதம் கழித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளார்.கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் “தன லாபம்” என்று எழுதியது மட்டும்தான் அவர் கண்களுக்கு தெரிகிறது. அவர் இங்கிருந்து முழுமையாக மக்கள் பணிகளில் ஈடுபட வேண்டும். அவர் அதற்கு தயாராக இல்லை. ஆடி 18 அன்று எந்த படப்பிடிப்பும் இருக்காது என்பதனால் பொழுதுபோக்கிற்காக அவர் கோவைக்கு வருகை தந்துள்ளார்.கமலஹாசனுக்கு ஓட்டு போட்டதற்கு வெட்கப்படுகிறோம் என்றும் சில மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கமலஹாசன் கோவைக்கு தொடர்ந்து வருகிறார் என்பது ஒரு தவறான வார்த்தை.

அவர் முழுமையாக இங்கிருந்து ஐந்து ஆண்டு காலம் வேலை செய்யட்டும். அதற்குப்பின் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மக்கள் வாய்பளிக்கட்டும்.கமலஹாசன் நட்சத்திர விடுதியில் தங்கி தான் அனைத்தையும் மேற்கொள்கிறார் என்றால் அவர் மக்களுடன் இருந்து வேலை செய்வதற்கு அவர் தயாராக இல்லை. திமுக அரசால் கோவை மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு தொகுதி அதிகமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 102

0

0