என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் : கலாம் பிறந்த நாளுக்கு கமல் வாழ்த்து..!

Author: Babu
15 October 2020, 11:38 am
Kamal Cover
Quick Share

சென்னை : நாட்டின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஏவுகணை நாயகன் எனப் போற்றப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கடந்த 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்தார். ராமேஸ்வரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது வாழ்நாளை மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக மாற்றினார். இதனால், அவரது பிறந்த நாளை உலக மாணவர்கள் தினமாக ஐ.நா. அறிவித்தது.

இந்திய விண்வெளித்துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கிய அவருக்கு, பத்ம பூஷண் (1981), பத்ம விபூஷண்(1990), பாரத ரத்னா (1997) உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. அதோடு, நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் பதவியையும் அவர் அலங்கரித்தார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

அவரது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த நாளில் அவரது சாதனைகளையும், நினைவுகளையும் அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, கமல் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 44

0

0