தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் : கமல்ஹாசன் வாழ்த்து..!

17 September 2020, 11:28 am
kamal - updatenews360
Quick Share

சென்னை : தந்தை பெரியாரின் 142வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தந்தை பெரியாரின் 142வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் திராவிடக் கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் இவரது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெரியாரின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! “பெரியாருக்கு முன்” “பெரியாருக்குப் பின்” என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0