ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு : சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேரில் வாழ்த்து

4 May 2021, 7:28 pm
Kamal - stalin - meet - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7ம் தேதி முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை கூறினார்.

Views: - 117

0

0

Leave a Reply