பெண்களை குலை நடுங்கச் செய்த காசியின் வழக்கு : 3வது குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!!!!

25 January 2021, 3:49 pm
Quick Share

தனியார் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பது போல் ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட காதல் மன்னன் காசியின் மீது 3-வது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து, அவர்களோடு தனியறையில் உல்லாசம் அனுபவித்ததை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோக்கள் எடுத்து, அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து, காசி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார் மற்றும் இதுவரை காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்த புகார்கள் என மொத்தம் ஏழு புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கந்துவட்டி, பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்த தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஐந்து வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது. குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணிகளில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், காதல் மன்னன் காசி மீதான மூன்றாவது குற்றப்பத்திரிகை நாகர்கோவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்தனர். ஏற்கனவே இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனியார் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பது போல ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வழக்கில் 3-வது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 0

0

0